நினைவிற் கொள்ள: (நிலைமண்டில ஆசிரியப்பா) தேமா புளிமா கருவிளம் கூவிளம் நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை எனவரும் ஈரசைச் சீர்கள் அமைப்பே. (நிலைமண்டில ஆசிரியப்பா) கீழ்வரும் குறள்தனை அலகிட் டறிந்தே சீர்களின் அசைகளைக் கூர்ந்து நோக்கியே சீர்களின் பெயர்களைச் செய்யுளின் அடிகள் அமைந்திடும் நிரலில் எழுதுக அமைத்தே. வலைதளக் குறிப்பு: சீர்களின் பெயர்களை மின்னெலி சொடுக்கிட சீர்களின் பெயர்கள் பேழையில் விழுந்தே எழுதுதல் எளிதினில் கைவர உதவுமே. [மின்னெலி=mouse; பேழை=textarea box] அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல. (Click a word to select it into the textarea box.)
No comments:
Post a Comment