நினைவிற் கொள்ள: (நிலைமண்டில ஆசிரியப்பா) தனிநேர் அசைச்சீர் நாள்-எனப் படுமே தனிநிரை அசைச்சீர் மலர்-எனப் படுமே தனிக்குறில் அல்லா நேரசை யுடனே குற்றிய லுகரம் சேர்வது காசு நிரையுடன் அதுவே சேர்வது பிறப்பு. (நிலைமண்டில ஆசிரியப்பா) வெண்பா ஈற்றுச் சீரென வந்த எண்பதி னைந்தாம் அசைச்சீர் கீழே எண்பதி னைந்தில் எட்டு மட்டும் நாள்-மலர் என்னும் வாய்பாட் டினிலே. நாள்-மலர் அசைச்சீர் எட்டும் ஆய்ந்தே நாள்-என வருவதை இங்ஙனம் எழுதுக: தனிக்குறில், ஒற்றுடன், தனிநெடில், ஒற்றுடன். மலர்-என வருவதை இங்ஙனம் எழுதுக: குறிலிணை, ஒற்றுடன், குறில்நெடில், ஒற்றுடன் (Click a word to select it into the textarea box.)
No comments:
Post a Comment