Thursday, September 1, 2016

பயிற்சி 03.23.01. எழுத்தியல்: அளபெடை வகைகள்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
3.23. எழுத்தியல் பயிற்சி
பயிற்சி 3.23.01. அளபெடை வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நினைவிற் கொள்ள:
அளபெடுக்கும் போதோர் இனவெழுத்து தோன்றுமே:
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ.
ஈரசைச் சீரிடை வேறென நிற்கும்
ஓரசைச் சொற்கள் அளபெடுத்து வந்தே
ஓசை நிறைத்தோ வேறு வகையிலோ
அளபெடுத்த சொற்கள் பன்னிரண்டை மட்டும்
ஈரசைச் சீர்களாக்கி எழுதுக வரிசையிலே.

பளார் என்று அறைந்து விட்டான்
பெண்ணவள் கலீர் என்று சிரித்தாள்
தொண்டன் தலையாடச் சொன்னான் ஊம்
எலே என்றால் சட்டை செய்யான்
மன்னன் கணை தொடுத்து வீழ்த்தினான்
சலோ சலோ கூறக் குதிரை நகர்ந்தது
ஔ என்று மிழற்றியது குழந்தை
ஆம் சொல்வதினும் ஓம் சொல்வது அவரது பழக்கம்
வளை சென்ற சாலையில் விபத்து
அளை பேசினால் துன்பம் இல்லை
Tip: Use an online Unicode editor such as the one in the link below, to create the words,
and then copy paste them into the textarea box below.
தமிழ்ப் பலகை


அழுத்துக இங்கே விடையினை அறிய.


No comments:

Post a Comment