நினைவிற் கொள்ள: (நிலைமண்டில ஆசிரியப்பா) தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர் தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி நேர்நேர்நிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நேர்நிரைநிரை என்பன மூவசைச் சீர்களின் அமைப்பே. எனவரும் ஈரசைச் சீர்கள் அமைப்பே. (நிலைமண்டில ஆசிரியப்பா) ஔவையின் புகழ்மிகு மூதுரை வெண்பாவை அவ்வளவும் மூவசைக் கனிச்சீர் பயில மாற்றி யெழுதிய கீழ்வரும் செய்யுளின் கனிச்சீர் பெயர்களை மட்டும் குறிக்கவும். வலைதளக் குறிப்பு: சீர்களின் பெயர்களை மின்னெலி சொடுக்கிட சீர்களின் பெயர்கள் பேழையில் விழுந்தே எழுதுதல் எளிதினில் கைவர உதவுமே. [மின்னெலி=mouse; பேழை=textarea box] (வெண்கலிப்பா) நெல்லுக்கென இறைத்தநீரது வாய்க்கால்வழி யோடிவந்திடப் புல்லுக்குமே வழியெங்கிலும் பொசிவதாகுமே -- தொல்லுலகினில் நல்லாரென ஒருவராவது உள்ளாரெனில் அவர்பொருட்டென எல்லார்க்குமே பெய்வதாகுமே மழை. (Click a word to select it into the textarea box.)